For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெண்களுக்கு நற்செய்தி.! இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்ட கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி..

11:58 AM Jan 14, 2024 IST | 1newsnationuser5
பெண்களுக்கு நற்செய்தி   இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்ட கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி
Advertisement

உலக அளவில் பெண்கள் பலரும் கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் தொடர்ந்து பலருக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கர்ப்பபையை நீக்கும் அபாயம் ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் ஹார்மோன் பிரச்சனைகளால் அவதியுருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக கர்ப்பப்பை புற்று நோய்க்கு தடுப்பூசி இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கர்ப்பப்பை புற்றுநோய் உருவாகுவதை தடுக்கும் விதமாக இந்தியாவில் பெண்களுக்கு ஹியூமன் பாபிலோனா எனும் கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி போடுவதற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் முதன்மையாக ஒன்பது முதல் 15 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மூன்று முறை இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்திய தடுப்பூசி நிறுவனம் வழங்கும் செர்வாவாக் தடுப்பூசி மற்றும்  குவாட்ரைவைலைன்ட் தடுப்பூசிகள், HPV16, HPV18, HPV 11 போன்ற தடுப்பூசிகள் பிறப்புறுப்பில் நோய் தொற்றுகள், பிறப்புறுப்பு புண்கள், கர்ப்பப்பை புற்றுநோய், பிறப்புறுப்பில் ஏற்படும் புற்று நோய்களை தடுக்கிறது என்று கூறிவந்தனர்.

ஆனால் இதில் செர்வாவாக் தடுப்பூசியை தவிர மற்ற தடுப்பூசிகள் புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக வயது வந்த டீன் ஏஜ் பெண்கள் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பாக தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி, புற்றுநோய் வைரஸ் உள் நுழைவதை மட்டுமே தடுக்கும். முன்பாக உள் நுழைந்த வைரஸை அழிக்காது என்று ராஜீவ் காந்தி மருத்துவமனை புற்றுநோய் ஆலோசகர்- புற்றுநோய் நிபுணர்- மகப்பேறு மருத்துவர் சரிகா அறிவித்துள்ளார்.

Tags :
Advertisement