இன்று முதல் பொறியியல் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்..!! தரவரிசைப் பட்டியல் எப்போது..?
இன்று பொறியியல் பாடப் பிரிவுகளில் சேர விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பொறியியல் படிப்பில் சேர மே 6ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் 10, 11ஆம் தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது.
இதில் சுமார் 2,53,954 மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தனர். இதில், 2,09,645 மாணவர்கள் கட்டணம் செலுத்தி இருப்பதாகத் தெரிகிறது. 1,93,853 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் 2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று (ஜூன் 14) முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது. ஜூலை 10ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரப்படும் பெட்ரோல், டீசல்..!! அப்படினா ஒரு லிட்டர் எவ்வளவு இருக்கும்..?