டெல்லி முதல்வர் அதிஷியை கைது செய்ய மத்திய அரசு திட்டம்..? - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
முதல்வர் அதிஷி மர்லினாவை கைது செய்ய மத்திய அரசு சதி செய்வதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சமீபத்தில் கெஜ்ரிவால் வெளியிட்ட அறிக்கையில், பொய்யான வழக்கை உருவாக்கி ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது பாஜக தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
அந்த அறிக்கையில், “மஹிளா சம்மன் யோஜனா மற்றும் சஞ்சீவனி யோஜனாவால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். அடுத்த சில நாட்களில் அதீஷி ஜியை போலி வழக்கு போட்டு கைது செய்ய திட்டமிட்டுள்ளனர், அதற்கு முன், ரெய்டுகள் மூத்த ஆம் ஆத்மி தலைவர்கள் மீது நடத்த மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது என குற்றம் சாட்டினார்.
ஆம் ஆத்மி கட்சியின் (AAP) ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்த "மஹிளா சம்மன் யோஜனா" மற்றும் "சஞ்சீவனி யோஜனா" ஆகியவை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. தற்போது டெல்லி அரசின் கீழ் இதுபோன்ற திட்டங்கள் எதுவும் இல்லை என்று டெல்லியின் சுகாதாரத் துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read more ; No Exam.. லட்சத்தில் சம்பளம்.. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை..!! விண்ணப்பிக்க ரெடியா..?