செக் வைத்த மத்திய அரசு..!! தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு பறந்த திடீர் உத்தரவு..!! தட்டுப்பாடு வருமா..? அதிர்ச்சியில் மக்கள்..!!
சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு 20% அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்று பறந்துள்ளது.
ரேஷன் கடைகளில் பாமாயில் ஸ்டாக்கை உறுதி செய்ய கடை ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். அதாவது, போதுமான எண்ணெய் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, எண்ணெய் மற்றும் மற்ற பொருட்கள் அனைத்தும் ஸ்டாக் நிரப்பப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், மீண்டும் ஸ்டாக் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு அறிவிப்பின்படி, சமையல் எண்ணெய், சோயா மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜியத்தில் இருந்து 20% ஆகவும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், பீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரி 32.5% ஆகவும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக ஹோட்டல்களில் உணவு விலை புதிய உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் இந்த நேரத்தில் இப்படி பொருட்களின் விலை உயர்வதால் ஸ்வீட், உணவு பதார்த்தங்களின் விலையும் புதிய உச்சத்தையும் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : பயணிகளுக்கு செம குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசு எடுத்த சூப்பர் முடிவு..!! இனி அந்த பிரச்சனையே இருக்காதாம்..!!