முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திடீரென ரத்து செய்த மத்திய அரசு..!! பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு..!! எதற்காக தெரியுமா..?

Annamalai has welcomed the central government's temporary cancellation of the tender notice for extracting ore sand from Kurinjankulam and surrounding areas in Tenkasi district.
01:33 PM Jul 31, 2024 IST | Chella
Advertisement

தென்காசி மாவட்டம் குறிஞ்சான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்திருப்பதை அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

Advertisement

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”குறிஞ்சான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கிராஃபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. தமிழக அரசும் இதற்கான ஒப்புதலை வழங்கியிருந்ததாக அறிகிறோம். ஆனால், குறிஞ்சான்குளம் பகுதி பொதுமக்களும், விவசாயிகளும், தங்கள் பகுதியில் தாது மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

டெல்டா பகுதியில் புதிய நிலக்கரி சுரங்கங்களிற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டபோது, அதை ரத்து செய்ய தமிழக பாஜக எடுத்த முன்னெடுப்பைப் போல, இந்த கிராஃபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருந்தோம். இதன் தொடர்ச்சியாக, குறிஞ்சான்குளம் பகுதியில், தாது மணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்று, குறிஞ்சான்குளம் பகுதியில் தாதுமணல் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை தற்காலிகமாக ரத்து செய்துள்ள மத்திய அரசுக்கு, தென்காசி மாவட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பிலும், தென்காசி மாவட்ட பாஜக சார்பிலும், மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கிராஃபைட் உள்ளிட்ட தாது மணல் எடுப்பதற்காக மீண்டும் ஒப்பந்தப்புள்ளிகள் கோருகையில் அந்த பட்டியலில் இருந்து குறிஞ்சான்குளம் நிரந்தரமாக நீக்கப்படும் என்ற நம்பிக்கை தமிழக பாஜகவுக்கு உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Read More : மதமாற்ற தடை சட்டம்..!! விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்..!! நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

Tags :
அண்ணாமலைமத்திய அரசு
Advertisement
Next Article