"இந்த உருட்டெல்லாம் இங்க செல்லாது, கேட்கிற நிதிய கொடுங்கையா."! - பிரதமர் மோடிக்கு கே.எஸ் அழகிரி பதிலடி.!
பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே எஸ் அழகிரி கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் மோடியின் வாய்ஜால வித்தைகள் தமிழகத்தில் எடுபடாது என தெரிவித்திருக்கிறார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டம் ஒழிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது பாஜகவினர் இதற்கு கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர் . இந்த சம்பவத்தையும் அநாகரீகமான செயல் என கண்டித்து இருக்கிறார் கேஎஸ்.அழகிரி.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் தமிழக அரசின் சார்பில் 12,965 கோடி ரூபாய் நிதி மத்திய அரசிடம் கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசோ 450 கோடி நிதி தருவதாக கூறி வருகிறது. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை. இதனை மறைப்பதற்காக தமிழ் மொழி மற்றும் தமிழக மக்கள் பற்றி புகழ்ந்து பேசி வித்தை காட்டி வருகிறார் மோடி. இந்த வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது என தெரிவித்திருக்கிறார் .