முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை...! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்...!

08:04 AM Nov 25, 2023 IST | 1newsnationuser2
Advertisement

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisement

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள், YASASVI நுழைவுத்தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது YASASVI எழுத்துத்தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 8 மற்றும் 10ஆம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத்தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும் எனவும் மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டம் தொடர்பான விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags :
central govtScholarshipstudents scholarshiptn government
Advertisement
Next Article