முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"மாப்பிள்ளை அவர்தான்; ஆனா சட்டை மட்டும் தமிழ்நாடு அரசு.." முதல்வர் ஸ்டாலினை சீண்டிய அண்ணாமலை.!

06:29 PM Jan 30, 2024 IST | 1newsnationuser7
Advertisement

தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வரும் அண்ணாமலை தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் பத்திரிக்கையாளர் சங்கத்தினை திமுகவுடன் தொடர்புபடுத்தி பேசினார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி என திமுக அரசின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்.

Advertisement

சில தினங்களுக்கு முன்னர் டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் 'X' சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பதிவு செய்திருந்தார். அந்த வீடியோவில் 2ஜி அலைக்கற்றை ஊழல் சம்பந்தமாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ .ராசா மற்றும் முன்னாள் தமிழக புலனாய்வுத்துறை அதிகாரி ஜாபர் சேட் ஆகியோருக்கு இடையே நடந்த உரையாடலை பதிவு செய்திருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது .

இந்நிலையில் திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து அண்ணாமலை வைத்திருக்கும் விமர்சனம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்த அவர் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் எல்லாம் மத்திய அரசின் திட்டம் என குறிப்பிட்டு இருக்கிறார். அந்தத் திட்டங்களில் ஸ்டிக்கர் ஒட்டி தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக படையப்பா படத்தில் வரும் நகைச்சுவை வசனத்தையும் மேற்கோள் காட்டி இருக்கிறார் . அதன்படி மாப்பிள்ளை மத்திய அரசுதான் ஆனால் போட்டிருக்கும் சட்டை தமிழக அரசுடையது என நகைச்சுவையுடன் தெரிவித்து இருக்கிறார். இந்தக் கருத்தின் மூலம் முதல்வரையும் தமிழக அரசையும் சீண்டி இருக்கிறார் அண்ணாமலை.

Tags :
annamalaiBJPDmkmk stalintn politics
Advertisement
Next Article