நிதி ஒதுக்கீடு பிரச்சனை: மாநில அரசுகள் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் என்ன.? திட்டக்குழு துணைத் தலைவர் விளக்கம்.!
மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக தென் மாநிலங்கள் குற்றம் சாட்டி வருவது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கேரளா மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து வரும் பாரபட்சம் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கர்நாடக முதல்வரும் தங்களது அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரி என்ன செய்யப்படுகிறது. மத்திய அரசு அவற்றை எவ்வாறு செலவு செய்கிறது மேலும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக நடைபெறும் பாரபட்சங்கள் குறித்து தெளிவான விளக்கம் அளித்திருக்கிறார் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன். மத்திய அரசு மாநிலங்களுக்கு தேவையான நிதியை அளித்து விட்டதாக பொய் கூறி வருகிறது என தெரிவித்திருக்கிறார் அவர். பேரிடர் நிவாரணத் தொகை என ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து வருடத்திற்கு இரண்டு முறை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் என தெரிவித்துள்ளார்.
பிப்ரவரியில் தரவேண்டிய இந்த தொகையை டிசம்பர் மாத புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட நேரத்தில் மத்திய அரசு வழங்கியது. ஆனால் இந்த சேதாரங்கள் குறித்து மதிப்பீடு செய்து அதிக நிதி தமிழக அரசு கேட்டபோது கொடுக்க மறுத்து விட்டது என்ன தெரிவித்திருக்கிறார். மேலும் வெள்ள நிவாரணத்திற்காக தமிழக அரசு கேட்ட தொகையை மத்திய அரசு கொடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசிற்கு கிடைத்தது வழக்கமான தொகை தான் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் மாநில அரசுகளின் அதிகாரங்களை மத்திய அரசு நசுக்குவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இது மிகவும் ஆபத்தான போக்கு என ஜெயரஞ்சன் எச்சரித்துள்ளார். முன்பு இருந்ததைப் போல் தற்போது இல்லை என தெரிவித்த அவர் தற்போது வட மாநிலங்கள் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன என தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் வடக்கு மாநிலங்கள் வீழ்ச்சியடைகின்றன.
பொதுவாக வளர்ச்சியடைந்த மாநிலங்களில் இருந்து கிடைக்கும் வரியை வளர்ச்சி அடையாத மாநிலங்களுக்கு பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த நிதியை பயன்படுத்தினாலும் அந்த மாநிலங்கள் மேலும் வீழ்ச்சி அடைவது தான் ஒன்னும் பிரச்சனை என குறிப்பிட்டு இருக்கிறார். ஒரு மாநிலம் அதன் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற தவறும் போது வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். இது மிகவும் ஆபத்தான போக்கு என எச்சரித்துள்ளார். மாநிலங்களை காப்பதற்கு தான் தென் மாநில முதல்வர்கள் மத்திய அரசின் போன்ற கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.