மத்திய அரசின் இலவச வீடு திட்டம்..!! வந்தது புதிய மாற்றம்..!! 2029-க்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!!
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான திட்டமாகும். சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த ஆண்டோடு, PM ஆவாஸ் யோஜனா திட்டம் முடிவடைய இருந்தது. ஆனால், அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை நீட்டித்துள்ளது.
இதனுடன் சில புதிய விதிமுறைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பைக்குகள் மற்றும் பிரிட்ஜ் வைத்திருக்கும் நபர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த மாற்றங்கள், விண்ணப்பதாரர்களின் வரம்பை விரிவுபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், 2029-க்குள் வீடற்ற நிலையை ஒழிக்கும் இலக்கை அடையும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
முதன் முதலில் இத்திட்டத்திற்கு தகுதியான ஏழை மக்களின் பட்டியல் 2018-இல் உருவாக்கப்பட்டது. பிறகு அந்த பட்டியலைத் தற்போது புதுப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒரு கூட்டத்தை நடத்தி அதிலிருந்து வீடு தேவைப்படும் நபர்களை தேர்வு செய்யும் பணியில் தற்போது அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், கிராமத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் அதிகாரம் கிடையாது. அதாவது அவர்களின் விருப்பத்திற்கு இணங்க இனி விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்ய முடியாது.
Read More : எனக்கு விவகாரத்தா..? நான் எதுக்கு நிரூபிக்கணும்..? பதிலடி கொடுத்த பாவனா..!!