முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி.! "எஸ்.சி, எஸ்.டி, சிறுபான்மையினர் ஆதார் அட்டைகள் செயலிழப்பு" பாஜகவின் அரசியல் நடவடிக்கை.! மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.!

07:19 PM Feb 19, 2024 IST | 1newsnationuser7
Advertisement

NRC சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னோட்டமாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ள எஸ்.சி எஸ்.டி மற்றும் சிறுபான்மையின மக்களின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு செயல் இழக்க செய்வதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார்.

Advertisement

மேற்கு வங்க மாநிலத்தில் ஆதார் அட்டைகள் செயலிழக்கச் செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். வங்காளத்தில் ஆதார் அட்டைகள் திடீரென செயலிழக்கச் செய்யப்பட்டதற்கான காரணங்களை அறிய விரும்புவதாக தனது கடிதத்தில் பானர்ஜி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது 'X' சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கும் அவர் "குறிப்பாக மேற்கு வங்கத்தில் SC, ST மற்றும் OBC சமூகங்களை குறிவைத்து ஆதார் அட்டைகளை பொறுப்பற்ற முறையில் செயலிழக்கச் செய்யப்படுகிறது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்தியாவின் குடிமக்கள். அவர்கள் அதார் அட்டை வைத்திருந்தாலும் சரி வைத்திருக்கவில்லை என்றாலும் சரி. மேற்குவங்க மாநில அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் பெறலாம்" என குறிப்பிட்டு இருக்கிறார்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ள எஸ்சி, எஸ்டி மற்றும் சிறுபான்மை சமூகத்தினரின் ஆதார் அட்டைகளை செயலிழக்கச் செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தின் நகலும் அவரது 'X' வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

English Summary: Mamta Banerjee claimed that bjp government deactivating sc, st and minority citizens adhaar card in order to implement NRC before 2024 election.

Tags :
adhaar cardmamta banarjeemodinrcpolitics
Advertisement
Next Article