Aravind Kejriwal | "முதல்வரை கொலை செய்ய சதி; பின்னணியில் மத்திய அரசு.? ".. டெல்லி அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்.!!
Aravind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் சிறையில் வைத்து அரவிந்த் கெஜ்ரிவாலை கொள்ள சதி நடக்கிறது என டெல்லி அமைச்சர் பகீர் தகவலை பகிர்ந்து இருப்பது அரசியல் வட்டாரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை(Aravind Kejriwal) அமலாக்கத்துறை கைது செய்தது. தனது கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்காமல் சிறையில் வைத்தே அரவிந்த் கெஜ்ரிவாலை கொள்ள சதி நடப்பதாக டெல்லி அமைச்சர் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்குவதற்கு சிறை நிர்வாகம் தொடர்ந்து மறுப்பு தெரிவிப்பதாக குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் மருத்துவர் களைந்த ஆலோசிப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாக டெல்லியின் அமைச்சர் சௌரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். இவற்றிற்கு பின்புலமாக மத்திய அரசும் டெல்லியின் துணைநிலை ஆளுநரும் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
நோயாளிகளுக்கு வழங்க கூடிய அடிப்படை உரிமைகள் கூட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு மறக்கப்படுகிறது என செய்தியாளர்களிடம் பரத்வாஜ் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் ஜாமீன் பெறுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் அதிக மாம்பழங்களை சாப்பிட்டு ரத்தத்தில் தன்னுடைய சர்க்கரையின் அளவை உயர்த்துகிறார் என சிறை நிர்வாகம் குற்றம் சாட்டி இருக்கிறது.