ஜூலை 22ஆம் தேதி மத்திய அரசின் முழு பட்ஜெட் தாக்கல்..? என்னென்ன முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்..?
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் ஜூலை 22ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக பொறுப்பேற்ற பின், அவரது நிர்வாகத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட உள்ள முழு பட்ஜெட் இதுவாகும். இதன் மூலம் புதிய அரசானது தனது அடுத்த 5 ஆண்டுகளுக்கான நிதிக் கொள்கையின் புதிய கட்டத்திற்குள் நுழைகிறது. இதனால் பல பல முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
இடைக்கால பட்ஜெட் :
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தாண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்த, பட்ஜெட்டானது ஏப்ரல் மற்றும் மே 2024-க்கு இடையில் நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலை முன்னிட்ட இடைக்கால பட்ஜெட்டாகும். இந்நிலையில், சீதாராமன் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட், தொடர்ந்து ஏழாவது முறையாக தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டாகும்.
பிரதமர் மோடியின் அரசின் முதன்மைக் கொள்கை நோக்கங்கள், விவசாயத் துறையில் நிலவும் சவால்களைச் சமாளிப்பது, வேலைவாய்ப்பை எளிதாக்குவது, மூலதனச் செலவினங்களின் வேகத்தைத் தக்கவைத்தல் போன்றவற்றைச் சுற்றியே அமைகிறது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கட்டமைப்பை ஒழுங்குபடுத்துவது மற்றும் வரி இணக்கத்தின் சுமையை குறைப்பது ஆகியவை குறித்து நிதிநிலை அறிக்கையில் முக்கியமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : சவால் விட்ட பாஜக தலைவர் அண்ணாமலை..!! எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் #GoBackStalin..!!