தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் மத்திய அரசு..!! டாப்பில் தமிழ்நாடு தான்..!! நீங்களும் பயன்பெற வேண்டுமா..?
சிறு, குறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில், இதுவரை 49.5 கோடி பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அதிகம் பயன்பெற்ற மாநிலங்களின் லிஸ்டில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 2015இல் முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
தொழில் தொடங்க விரும்புவோருக்கு இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. அந்த வகையில், கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இந்த கடனை பெறுவதற்கு எந்தவித ஜாமீன் உத்தரவாதமும் தேவையில்லை. சிறு, குறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள், நுண் கடன் நிறுவனங்கள் கடன்களை வழங்குகின்றன.
முத்ரா திட்டத்தின் மூலம் கடன் உதவி பெற்ற தொழில் முனைவோர் பலர், பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளனர். சிறிய வியாபாரம் செய்பவர்கள் பலரும் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ளனர். கடந்த 6ஆம் தேதி வெளியான தரவுகளின் படி, நாடு முழுவதும் இத்திட்டத்தில் இதுவரை 49 கோடியே 55 லட்சம் பேர் கடன் உதவி பெற்றுள்ளனர். இவர்களுக்கு சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த முத்ரா கடன் திட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பேர் பயன்பெற்றுள்ளனர். அதாவது, இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 5 கோடியே 62 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெற்றுள்ளனர். தமிழகத்திற்கு அடுத்தபடியாக பீகாரில் 5 கோடியே 56 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளது.
இந்த மாநிலத்தில் 4 கோடியே 88 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். 4-வது இடத்தில் மேற்குவங்கம் உள்ளது. இந்த மாநிலத்தில் 4 கோடியே 83 லட்சம் பேரும் கடன் உதவி பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற எந்த ஜாமீனும் தேவையில்லை. பொதுவான சில தகவல்களையும், அது தொடர்பான ஆவணங்களையும் இணைத்து கொடுத்தால் போதும். குறிப்பாக, தொழில் திட்ட அறிக்கைகள், வருமான கணிப்புகள் தொடர்பான ஆவணங்களை வங்கிகள் கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் கேட்கும். விவசாயம், உள்ளிட்ட தொழிலுக்கு இந்த முத்ரா கடன் கிடைக்காது.
புதிதாக தொழில் தொடங்க ஆசைப்படுவோருக்கு மட்டுமே இந்த கடன் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். உற்பத்தி, வர்த்தகம், சேவைத் துறைகள், கோழிப்பண்ணை, பால் பண்ணை, தேனீ வளர்ப்பு போன்ற விவசாயம் தொடர்பான தொழில்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற முடியும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி கடன் வழங்கும் நிறுவனங்களால் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது.
Read More : மனைவியை வேறொருவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வற்புறுத்தும் கணவன்..!! என்ன காரணம் தெரியுமா..?