முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மத்திய அரசு எச்சரித்த ‘பன்றி கொலை’ சைபர் மோசடி.. அப்படின்னா என்ன..? எப்படி ஏமாத்துவாங்க..? தெரிஞ்சுக்க இதை படிங்க..

With cybercrime increasing day by day in this digital age, the central government has now warned of a new scam.
12:22 PM Jan 03, 2025 IST | Rupa
Advertisement

இந்த டிஜிட்டல் யுகத்தில் இணைய குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது புதிய மோசடி குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. அதாவது, பன்றி கொலை மோசடி" (pig butchering scam) அல்லது "முதலீட்டு மோசடி" என்று அழைக்கப்படும் புதிய இணைய மோசடி குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

வேலையற்ற இளைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள் அல்லது பணம் தேவைப்படுபவர்களை குறிவைத்து இந்த மோசடி நடத்தப்படுவதாகவும், தினமும் பலர் இந்த மோசடியில் பெரும் தொகையை இழக்கின்றனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தனது சமீபத்திய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. சைபர் குற்றவாளிகள் இந்தக் குற்றங்களைத் தொடங்க கூகுள் சேவை தளங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'பன்றி கொலை மோசடி' எங்கு தொடங்கியது?

இந்த மோசடி 2016 ஆம் ஆண்டு சீனாவில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஆன்லைன் மோசடி ஆகும். இது "ஷா ஜு பான்" என்றும் அழைக்கப்படுகிறது, இது மாண்டரின் மொழியில் 'பன்றியை கொல்லும் விளையாட்டு' என்று அர்த்தம். அதாவது சைபர் குற்றவாளிகளிடம் சிக்கும் மக்கள் தான் பன்றிகள், அவர்களிடம் பணத்தை திருடுவது தான் இவர்களின் நோக்கம். இந்த மோசடியில் சைபர் குற்றவாளிகள், போலியான ஆன்லைன் அடையாளங்களைப் பயன்படுத்தி விரைவாக பணம் சம்பாதிக்க விரும்பும் மக்களை ஈர்க்கிறார்கள்.

சைபர் குற்றவாளிகள் மக்களை எப்படி ஏமாற்றுகின்றனர்?

மோசடி நபர் மக்களை சமூக ஊடகங்கள், டேட்டிங் ஆப்ஸ் அல்லது ஏமாற்றும் செய்திகள் மூலம் தொடர்பு கொள்கிறார். குறிப்பாக மக்களை ஏமாற்ற கூகுள் சேவை தளங்கள், கூகுள் விளம்பரங்கள் மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட பேஸ்புக் விளம்பரங்களைப் பயன்படுத்துகின்றனர்.

பின்னர் தங்கள் இலக்கு யார் அதாவது பன்றி யார் என்பதை அடையாளம் கண்டு, அவர்களின் ஆன்லைன் முதலீடுகள் மற்றும் கிரிப்டோகரன்சி வர்த்தகம் குறித்து பேசுகின்றனர். அதில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

மோசடி எப்படி நடக்கிறது?

மோசடியான ஆன்லைன் வர்த்தகப் பயன்பாடுகளைப் பயன்படுத்தி, மோசடி நபர், போலியான ஆன்லைன் வர்த்தகங்களில் இருந்து லாபம் ஈட்டுவதாக கூறுகிறார். முதலில் சிறிய அளவில் முதலீடு செய்தால் போதும் என்று கூறும் இவர்கள் அதற்கான லாபத்தையும் வழங்கி மக்களை நம்பிக்கையை பெறுகின்றனர். பின்னர் பன்றிகளை'படுகொலை' செய்வதற்கு முன் அதாவது முதலீட்டாளர்களின் பணத்தை திருடுவதற்கு முன், அவர்கள் அதிக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறுகின்றனர். இதனை நம்பி முதலீட்டாளரும் அதிக பணத்தை முதலீடு செய்கிறார்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை எடுக்க முற்படும் போது தான் இது மோசடி என்பது தாங்கள் பணத்தை இழந்ததும் அவர்களுக்கு தெரியவருகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மோசடி பரிவர்த்தனைகள் பிளாக்செயின்கள் மூலம் செய்யப்படுவதால், பணத்தை மீட்டெடுப்பது மிகவும் கடினம்.

இந்தியாவில் இதுபோன்ற எத்தனை சைபர் மோசடிகள் நடந்துள்ளன?

தேசிய சைபர் கிரைம் அச்சுறுத்தல் பகுப்பாய்வுப் பிரிவு அதன் மார்ச் 2024 அறிக்கையில் பெரிய தொழில்நுட்ப தளங்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து 37,500க்கும் மேற்பட்ட புகார்களைப் பதிவு செய்து ஆய்வு செய்தது. இதில், அதிகபட்சமாக 42% வாட்ஸ்அப் தொடர்பானவை. மார்ச் 2024 வரை 14,746 சைபர் கிரைம் புகார்கள் வாட்ஸ்அப் மூலம் நடந்துள்ளது. 7,651 மோசடிகள் டெலிகிராம் மூலமும் 7,152 மோசடிகள் இன்ஸ்டாகிராம் மூலமும் 7,051 மோசடிகள் ஃபேஸ்புக் மூலமும் 1,135 மோசடிகள் யூடியூப் மூலம் நடந்துள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகம் என்ன கூறியுள்ளது?

இதுபோன்ற சைபர் குற்றங்கள் உலகளவில் நடைபெறுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இது பெரிய அளவிலான பணமோசடி என்றும் தெரிவித்துள்ளது.. சந்தேகத்திற்கிடமான டிஜிட்டல் கடன் செயலிகளின் பாதுகாப்பை ஆய்வு செய்தல், இலவச ஹோஸ்டிங் டொமைன்களின் ஆபத்து மற்றும் வங்கித் தீம்பொருளைப் புகாரளித்தல் போன்ற நுண்ணறிவுப் பகிர்வுக்காக Google உடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையமும் இதுபோன்ற மோசடிகளை சமாளிக்க திறன் மேம்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

Read More : Alert : ஒரே ஒரு லிங்க்.. ரூ.13 லட்சத்தை இழந்த DRDO அதிகாரி.. சைபர் மோசடி எப்படி நடந்தது தெரியுமா?

Tags :
cyber crimeCyber Fraudinvestment scammhamha reportpig butchering scampig butchering scam in tamilwhat is pig butchering scam
Advertisement
Next Article