விரைவில்...! வாடகை வீட்டில் வசிக்கும் நபர்கள் சொந்தமாக வீடு கட்டலாம்..! மத்திய அரசு கொண்டு வரும் திட்டம்...!
வாடகை வீடுகள், குடிசைப் பகுதிகள், குடியிருப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தின் தகுதியான பிரிவினர் தங்களுக்கு சொந்தமாக வீடு வாங்க அல்லது வீடுகட்டிக்கொள்ள உதவும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது.
2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்; வாடகை வீடுகள், குடிசைப் பகுதிகள், குடியிருப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தின் தகுதியான பிரிவினர் தங்களுக்கு சொந்தமாக வீடு வாங்க அல்லது வீடுகட்டிக்கொள்ள உதவும் திட்டத்தை அரசு தொடங்கும் என்று அறிவித்தார்.
கிராமப் பகுதிகளுக்கான பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் குறித்த சாதனையை எடுத்துரைத்த மத்திய நிதியமைச்சர், கொவிட் நோய்த்தொற்று காரணமாக சவால்கள் இருந்தபோதிலும், திட்டத்தை செயல்படுத்துவது தொடர்ந்து மூன்று கோடி வீடுகள் என்ற இலக்கு அடையப்பட உள்ளது. குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் எழும் தேவையைப் பூர்த்தி செய்ய அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் இரண்டு கோடி வீடுகள் கட்டப்படும் என்றார்.
2047-ம் ஆண்டுக்குள் நாட்டை 'வளர்ச்சியடைந்த பாரதமாக’ மாற்றும் வகையில், அனைத்து வகையான, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையுடன் அரசு செயல்பட்டு வருவதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். மீனவர்களுக்கு உதவுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மீன்வளத்திற்கென தனித் துறையை உருவாக்கியது எங்கள் அரசுதான். இதன் விளைவாக உள்நாட்டு மற்றும் மீன்வளர்ப்பு உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது. 2013-14 முதல் கடல்சார் உணவு ஏற்றுமதியும் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றார்.