”மக்களை குழப்பும் மத்திய அரசின் சட்டங்கள்”..!! ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் அவசர கதியில் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டங்கள், அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்” என மனுவில் வலியுறுத்தியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அமர்வு,'' புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்னர் சட்ட ஆணையத்தை ஆலோசித்து இருக்க வேண்டும்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. எனவே, இந்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Read More : இந்த பொருளின் விலை ஏன் இப்படி இருக்கு..? இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா..?