அதிரடி...! தவறான விளம்பரம் செய்த 45 பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்...!
தவறான விளம்பரம் செய்த 45 பயிற்சி மையங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் பிரிவு-10-ன் கீழ், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. இது நுகர்வோரின் உரிமைகளை மீறுதல், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், பொதுமக்கள், நுகர்வோரின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்துகிறது. 2024 நவம்பர், 13 அன்று, "பயிற்சித் துறையில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள், 2024"-ஐ வெளியிட்டுள்ளது, இது பயிற்சி மையங்கள் பொருட்கள் அல்லது சேவையின் விற்பனையை ஊக்குவிப்பதற்கும் ஏமாற்றும் அல்லது நியாயமற்ற நடைமுறைகளில் ஈடுபடுவதற்கும் தவறான அல்லது தவறான உரிமைகோரல்கள்/விளம்பரங்களைச் செய்வதைத் தடுக்கிறது.
நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் வகையில், தவறான விளம்பரங்களுக்காக 45 பயிற்சி மையங்களுக்கு அறிவிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 19 பயிற்சி நிறுவனங்களுக்கு ரூ.61,60,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள நுகர்வோர் தங்கள் குறைகளை 17 மொழிகளில் 1915 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் பதிவு செய்யலாம். வாட்ஸ்அப், குறுஞ்செய்தி, மின்னஞ்சல், என்சிஎச் செயலி, இணையதளம், உமாங் செயலி போன்ற பல்வேறு வழிகள் மூலம் குறைகளை பதிவு செய்யலாம்.
மத்திய குடிமைப் பணித் தேர்வ, ஐஐடி மற்றும் பிற நுழைவுத் தேர்வுகளில் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக தேசிய நுகர்வோர் உதவி எண் மூலம் நுகர்வோர் விவகாரங்கள் துறை வெற்றிகரமாக களம் கண்டுள்ளது. பல்வேறு பயிற்சி மையங்களின் நியாயமற்ற நடைமுறைகள் குறிப்பாக மாணவர்கள் / ஆர்வலர்களின் சேர்க்கை கட்டணத்தை திருப்பித் தராதது குறித்து தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் பதிவு செய்யப்பட்ட ஏராளமான புகார்களைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மொத்தம் ரூ.1.15 கோடி திருப்பித் தருவதற்கு வசதியாக இந்த குறைகளை தீர்க்க தேசிய நுகர்வோர் உதவி எண் ஓர் இயக்கத்தைத் தொடங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.