செப்டம்பர் மாதத்திற்கான 8 தொழில் துறைகளின் குறியீட்டை வெளியிட்ட மத்திய அரசு...!
2024 செப்டம்பர் மாதத்திற்கான முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீட்டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
எட்டு முக்கிய தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீட்டு எண் 2023 செப்டம்பர் குறியீட்டுடன் ஒப்பிடும்போது, 2024 செப்டம்பரில் 2.0 சதவீதம் (தற்காலிகமானது) அதிகரித்துள்ளது. சிமெண்ட், சுத்திகரிப்பு பொருட்கள், நிலக்கரி, உரங்கள் மற்றும் எஃகு ஆகியவற்றின் உற்பத்தி 2024 செப்டம்பரில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட உற்பத்தி செயல்திறனை தொழில்துறை குறியீட்டு எண் அளவிடுகிறது.
2024 ஜூன் மாதத்திற்கான முக்கிய எட்டு தொழில் துறைகளின் குறியீட்டு எண்ணின் ன் இறுதி வளர்ச்சி விகிதம் 5.0 சதவீதமாக உள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 4.2 சதவீதம் (தற்காலிகமானது) ஆகும்.
நிலக்கரி - நிலக்கரி உற்பத்தி (எடை: 10.33 சதவீதம்) 2023 செப்டம்பரை விட 2024 செப்டம்பரில் 2.6 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 5.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் - கச்சா எண்ணெய் உற்பத்தி (எடை: 8.98 சதவீதம்) 2023 செப்டம்பரை விட 2024 செப்டம்பரில் 3.9 சதவீதம் குறைந்துள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 2.1 சதவீதம் குறைந்துள்ளது.
இயற்கை எரிவாயு - இயற்கை எரிவாயு உற்பத்தி (எடை: 6.88 சதவீதம்) 2023 செப்டம்பரை விட 2024 செப்டம்பரில் 1.3 சதவீதம் குறைந்துள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 2.0 சதவீதம் அதிகரித்துள்ளது.
பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் - பெட்ரோலிய சுத்திகரிப்பு உற்பத்தி (எடை: 28.04 சதவீதம்) 2023 செப்டம்பரை விட 2024 செப்டம்பரில் 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
உரங்கள் - உர உற்பத்தி (எடை: 2.63 சதவீதம்) 2023 செப்டம்பரை விட 2024 செப்டம்பரில் 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 1.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
எஃகு - எஃகு உற்பத்தி (எடை: 17.92 சதவீதம்) 2023 செப்டம்பரை விட 2024 செப்டம்பரில் 1.5 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
சிமெண்ட் - சிமெண்ட் உற்பத்தி (எடை: 5.37 சதவீதம்) 2023 செப்டம்பரை விட 2024 செப்டம்பரில் 7.1 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அதன் ஒட்டுமொத்த குறியீடடு எண் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
மின்சாரம் - மின்சார உற்பத்தி (எடை: 19.85 சதவீதம்) 2023 செப்டம்பரை விட 2024 செப்டம்பரில் 0.5 சதவீதம் குறைந்துள்ளது. 2024-25 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அதன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 5.9 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 அக்டோபர் மாதத்திற்கான குறியீட்டு எண் 2024 நவம்பர் 29 வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்படும்.