For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Sugarcane 2024: கரும்பு கொள்முதல் விலை ரூ.315-ல் இருந்து ரூ.340 ஆக உயர்வு...! மத்திய அரசு ஒப்புதல்...!

06:08 AM Feb 22, 2024 IST | 1newsnationuser2
sugarcane 2024  கரும்பு கொள்முதல் விலை ரூ 315 ல் இருந்து ரூ 340 ஆக உயர்வு     மத்திய அரசு ஒப்புதல்
Advertisement

Sugarcane 2024: கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340 என உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisement

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்; கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340 என உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 10.25 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.340 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 0.1 சதவீத பிழிதிறன் அதிகரிப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.3.32 உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

மேலும், கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதை கருத்தில்கொண்டு 9.5 சதவீத சர்க்கரை கட்டுமானத்திற்கும் கீழே உள்ள கரும்புக்கு எந்தவித விலைக் குறைப்பும் செய்யக் கூடாது என அரசு தெரிவித்துள்ளது. அத்தகைய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.315.10 வழங்கப்படும். நடப்பு 2023-24 சர்க்கரைப் பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ.315 வழங்கப்படுகிறது.

Sugarcane 2024: Central government approves increase in sugarcane procurement price from Rs.315 to Rs.340 per quintal

Advertisement