முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

CISF-யில் அனைத்து மகளிர் படைப் பிரிவுக்கு மத்திய அரசு ஒப்புதல்...!

Central government approves all-women unit in CISF
10:42 AM Nov 14, 2024 IST | Vignesh
Advertisement

மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எப்) முதலாவது அனைத்து மகளிர் படைப் பிரிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது; "தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலை நோக்கை நனவாக்குவதற்கான உறுதியான நடவடிக்கையில், சிஐஎஸ்எஃப்பின் முதல் அனைத்து மகளிர் படைப்பிரிவை நிறுவ மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விமான நிலையங்கள், மெட்ரோ ரயில்கள் போன்ற நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும், கமாண்டோக்களாக விஐபி பாதுகாப்பை வழங்கும் பொறுப்பையும் மகளிர் பட்டாலியன் ஏற்கும். தேசத்தைப் பாதுகாக்கும் முக்கியமான பணியில் அதிகமான பெண்கள் பங்கேற்க வேண்டும் என்பது இந்த முடிவு நிறைவேற்றும்.

மத்திய ஆயுத போலீஸ் படையில் தேசத்திற்கு சேவை செய்ய விரும்பும் பெண்களுக்கு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை விருப்பமான தேர்வாக உள்ளது. சிஐஎஸ்எப்-பில் பெண்களின் எண்ணிக்கை தற்போது 7% க்கும் அதிகமாக உள்ளது. ஒரு மகளிர் பட்டாலியனைச் சேர்ப்பது, நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள இளம் பெண்களை இதில் சேர்ந்து தேசத்திற்கு சேவை செய்ய ஊக்குவிக்கும். இது சிஐஎஸ்எப்-பில் பெண்களுக்கு ஒரு புதிய அடையாளத்தை அளிக்கும். புதிய படைப்பிரிவின் தலைமையகங்களுக்கான இடத்தை முன்கூட்டியே ஆட்சேர்ப்பு, பயிற்சி மற்றும் தேர்வு செய்வதற்கான தயாரிப்புகளை சிஐஎஸ்எப் தலைமையகம் தொடங்கியுள்ளது.

முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, விமான நிலையங்களின் பாதுகாப்பு, தில்லி மெட்ரோ ரயில் பணிகள் ஆகியவற்றில் கமாண்டோக்களாக பன்முகப் பங்காற்றும் திறன் கொண்ட ஒரு தலைசிறந்த படைப்பிரிவை உருவாக்கும் வகையில் இந்தப் பயிற்சி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 53-வது சிஐஎஸ்எஃப் தின விழாவை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் பேரில் சிஐஎஸ்எஃப்-பில் அனைத்து மகளிர் பட்டாலியன்களை உருவாக்குவதற்கான திட்டம் தொடங்கப்பட்டது என்றார்.

Tags :
Amit shacentral govtCISFWomens
Advertisement
Next Article