முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"சளி, காய்ச்சலுக்கான 67 மருந்துகள் தரமற்றவை" அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம்….!

10:15 AM Apr 27, 2024 IST | Kathir
Advertisement

சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம்(CDSCO) தகவல் தெரிவித்திருந்த நிலையில் அவைகள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்ததில், போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு, கிருமி தொற்று, வைட்டமின் பாதிப்பு உள்ளிட்ட குறைபாடுகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவை என்பது தெரிய வந்தது.

அதில் பெரும்பாலான மருந்துகள், மேற்குவங்கம், இமாச்சலப் பிரதேசம், போன்ற மாநிலங்களில் தயாரிக்கப்படுபவை ஆகும். தரமற்றவை என தெரிவிக்கப்பட்ட அந்த மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதளத்தில் https://cdsco.gov.in வெளியிட்டுள்ளது. மேலும் தரமற்ற மருந்துகள் தயாரித்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வாரியம் முடிவு செய்துள்ளது.

Read More: பிளாக் ஆன 17000 கிரெடிட் கார்டுகள்!… என்ன காரணம்?… பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புதிய கார்டு!

Tags :
cdscocdsco bans 67 medicines
Advertisement
Next Article