முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தவறான விளம்பரம்... ரூ .5 லட்சம் அபராதம்...! மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை...!

08:30 AM Nov 10, 2023 IST | 1newsnationuser2
Advertisement

தவறான விளம்பரம் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்காக கான் பயிற்சி மையத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ .5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நாடு முழுவதும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மீறப்படுவதைக் கருத்தில் கொண்டு, தலைமை ஆணையர் நிதி காரே மற்றும் ஆணையர் அனுபம் மிஸ்ரா தலைமையிலான மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தவறான விளம்பரங்கள் மற்றும் தவறான கருத்துக்களை விளம்பரப்படுத்தும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்காக கான் பயிற்சி மையத்திற்கு (கே.எஸ்.ஜி) எதிராக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கான் பயிற்சி மையம் பல்வேறு வகையான படிப்புகளை விளம்பரப்படுத்தியது தெரியவந்தது. ஆனால் குடிமைப்பணி தேர்வு 2022-ல் விளம்பரப்படுத்தப்பட்ட வெற்றி பெற்றவர்கள் தேர்ந்தெடுத்த படிப்பு தொடர்பான தகவல்கள் அந்த விளம்பரத்தில் மறைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது.

அதன்படி, 03.08.2023 தேதியிட்ட கான் பயிற்சி மையத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. விளம்பரத்தில் காட்சிப்படுத்தப்பட்ட வெற்றி பெற்ற 682 பேரில் 674 பேர் கட்டணமில்லா திட்டமான நேர்முகத்தேர்வு திட்டத்தில் பங்கேற்றதாக கான் பயிற்சி மையம் தனது பதிலில் தெரிவித்துள்ளது.

ஆனால் 682 பேரில், 8 பேர் மட்டுமே கூடுதல் படிப்புகளுக்கு, அதுவும் முந்தைய ஆண்டுகளில் வழிகாட்டுதல்களைப் பெற்றதாக விசாரணை அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த உண்மை அவர்களின் விளம்பரங்களில் வெளியிடப்படவில்லை, இதனால் அவர்களின் வெற்றிக்கு தங்கள் நிறுவனம் காரணம் என்று கூறி நுகர்வோரை ஏமாற்றியுள்ளது.

Tags :
advertisementcentral govtFake ad
Advertisement
Next Article