இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்!. வரலாற்று சாதனை படைக்கும் நிர்மலா சீதாராமன்!. பட்ஜெட்டில் பெண்களுக்கான எதிர்பார்ப்பு!
Union budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்ட தாக்கல் செய்யவுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 7முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற வரலாற்று சாதனையை படைக்கவுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பின் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ள பா.ஜ.க அரசு தன் முதல் பட்ஜெட்டை வரும் இன்று தாக்கல் செய்யவுள்ளது. முதல்முறையாகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ள பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் இதுவாகும். இதன்மூலம் தொடர்ந்து 7முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற வரலாற்று சாதனையை படைக்கவுள்ளார்.
முன்னதாக, 1959ம் ஆண்டுமுதல் 1964ம் ஆண்டுவரை மத்திய நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய், தொடர்ச்சியாக 6 பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். அவரது சாதனையை நிர்மலா சீதாராமன் இன்று முறியடிக்கவுள்ளார். பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி தரும் திட்டம் இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்துக்கான தவணைத் தொகையை ஆண்டுக்கு 12,000 ரூபாயாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்த பட்ஜெட்டில் உள்ளது. தற்போது இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ஆண்டுக்கு 6,000 ரூபாய் கிடைக்கிறது. இந்த பணம் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது. இதனுடன், இந்த தொகையை காலாண்டுக்கு பதிலாக ஒவ்வொரு மாதமும் கணக்கிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வீதம் அனுப்ப கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த பட்ஜெட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் தனது வாக்கு வங்கியை மீண்டும் செயல்படுத்த அக்கட்சி முயற்சித்து வருகிறது. எனவே இதுபோன்ற சிறப்பு அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தலில் 36 சதவீத பெண் வாக்காளர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். ஆண்களின் எண்ணிக்கை 37 சதவீதமாக இருந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2014ஆம் ஆண்டு முதல் பாஜகவின் கவனம் பெண்கள் மீது உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் இலவச சிலிண்டர் திட்டம் மூலம் பாஜக வாக்கு வங்கியை அதிகரிக்க முயற்சி செய்தது. மத்தியப் பிரதேச தேர்தலிலும், சிவராஜ் சிங் சவுகான் அரசு லாட்லி பெஹ்னா யோஜனா திட்டம் பாஜகவுக்கு பயனுள்ளதாக இருந்தது.
நரேந்திர மோடி அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் திட்டமும் இதில் மிக முக்கியமான ஒரு திட்டமாகும். இந்த பட்ஜெட்டில், ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை அரசு அதிகரிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 2.94 கோடி வீடுகள் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வெற்றிகரமான திட்டத்திற்காக அரசாங்கம் மேலும் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
இன்னும் 6 மாதங்களில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் பாஜக சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. ஜார்க்கண்டில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதே சமயம் டெல்லியில் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை மையமாக வைத்து விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களை மையப்படுத்தி இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Readmore: மக்காவில் காணாமல்போகும் பெண்கள்!. எப்படி கவனிக்கப்படாமல் இருக்கிறது?. அதிர்ச்சி பதிவு!.