8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்... Central Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு...! மாதம் ரூ.8,000 வரை ஊதியம்...!
Central Bank of India வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Attender / Sub Staff, Watchman cum Gardener பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 7 அல்லது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.6,000 முதல் ரூ.8,000 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள 21-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
For More Info: https://drive.google.com/file/d/1YvH6M9h3_A-FDTKUZjpIZzqYgzbxDMcX/view?usp=sharing