மக்கள் தொகை கணக்கெடுப்பு..!! வீட்டிற்கு வரும் அதிகாரிகள்..!! உங்களிடம் கேட்கப்படும் கேள்விகள் இதுதான்..!!
நாடு முழுவதும் அடுத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கி உள்ளதாகவும், இது 2026ஆம் ஆண்டில் முடிவடையும் என்றும் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் கேள்விகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
நம் இந்திய நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிறகு 2021ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், கொரோனா காரணமாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்ந்து தாமதப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான், அடுத்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு தொடங்கும் கணக்கெடுப்பு பணி என்பது 2026ஆம் ஆண்டில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர்.
இதற்கிடையே தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கேட்கப்படும் கேள்விகள் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த தேதி, கிராமம், திருமணம் ஆனதா?, குழந்தைகள் எத்தனை?, மதம் என்ன? வீட்டின் தலைவர் பெண்ணா? வீட்டில் எத்தனை அறைகள் உள்ளன? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி தொலைபேசி - செல்போன் வசதி உள்ளதா? இணையதள வசதி உள்ளதா? சைக்கிள், பைக் அல்லது ஸ்கூட்டர், சொந்தமாக கார் உள்ளதா? குடிநீர் வசதி, மின்வசதி, கழிவறை வசதி, சமையல் எரிவாயு சிலிண்டர், டிவி வசதி உள்ளதா?, பட்டியலினத்தை சேர்ந்தவரா? பிற சமுதாயத்தை சேர்ந்தவரா? என்பது போன்ற கேள்விகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.
மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது மொத்தம் 6 மதங்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. அதாவது இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், புத்தம், சீக்கியம், ஜெயின் உள்ளிட்ட மதங்கள் மட்டும் இடம்பெறலாம் என்று சொல்லப்படுகிறது. கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பாக இன்னும் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனாலும் கூட கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் 2,650 சாதிகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை..!! ஒரு சவரன் ரூ.59,000..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!