ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய செல்போன் ஆற்றிலிருந்து ஸ்கூபா டைவிங் வீரர்கள் மூலம் மீட்பு...!
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் கொசஸ்தலை ஆற்றிலிருந்து ஸ்கூபா டைவிங் வீரர்கள் மூலம் மீட்கப்பட்டது. கடம்பத்தூரைச் சேர்ந்த ஹரிஹரன் குற்றவாளிகளின் செல்போன்களை சேதப்படுத்தி ஆற்றில் வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரெளடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கோரி போலீஸார் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், 5 நாள்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இணை ஆணையா் விஜயகுமாா் தலைமையில் 10 தனிப்படையினா் 11 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனா். குற்றவாளிகள் திருவேங்கடம் என்பவர் போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹரிதரன் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக உள்ளார்கொலைக்கு பயன்படுத்திய செல்போன்கள் திருவள்ளூர் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்போன்களை ஸ்கூபா வீரர்கள் மூலம் காவல்துறையினர் மீட்டனர். கடம்பத்தூரைச் சேர்ந்த ஹரிஹரன் குற்றவாளிகளின் செல்போன்களை சேதப்படுத்தி ஆற்றில் வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.