Bigg Boss Season 8இல் கலந்து கொள்ளும் பிரபலங்கள்..!! அட இவர்களுமா..? வெறித்தனமா இருக்கப் போகுது..!!
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதுவரை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், இம்முறை விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, அடுத்த தொகுப்பாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதில், பல நடிகர், நடிகைகளின் பெயர்கள் அடிபட்ட நிலையில், இறுதியாக விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பலரும் சிம்புவை எதிர்பார்க்கின்றனர்.
அதே சமயம், பிக்பாஸ் 8-வது சீசன், அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும், இதற்காக போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சீசனில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்களின் உத்தேசப் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகன் அருண் பிரசாத், குக் வித் கோமாளி பிரபலம் ஷாலின் சோயா, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரீனா, விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆகியோரின் பெயர் அடிபடுகிறது.
மேலும், கலக்கப்போவது யாரு புகழ் ராமர், "காத்து மேல காத்து கீழ" பாடல் மூலம் பிரபலமான பால் டப்பா மற்றும் பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமாரும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இறுதியாக சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் அமலா ஷாஜி பெயரும் இதில் அடிபடுகிறது. பொதுவாக பிக்பாஸில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லுவார்கள். அதன்படி, இந்நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Read More : 7 கிலோ வரை மளமளவென குறையும் உடல் எடை..!! பிரபல நடிகை சொன்ன கேரள பானத்தின் ரகசியம்..!!