For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வெறும் ரூ.70 செலவில் சீலிங் ஃபேன் செம ஸ்பீடில் சுழலும்..!! நீங்களே ஈசியாக சரி செய்யலாம்..!! சூப்பர் டிப்ஸ்..!!

05:56 PM Apr 12, 2024 IST | Chella
வெறும் ரூ 70 செலவில் சீலிங் ஃபேன் செம ஸ்பீடில் சுழலும்     நீங்களே ஈசியாக சரி செய்யலாம்     சூப்பர் டிப்ஸ்
Advertisement

ஒவ்வொருவரின் வீடுகளிலும் சீலிங் ஃபேன் உள்ளது. ஏர் கூலர், ஏசி வாங்க முடியாத சிலர் கோடைக் காலத்திலும் மின்விசிறியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், குளிர்காலத்தில் மின்விசிறி செம ஸ்பீடாக சுத்தும், அதே வேளையில் கோடை காலத்தில் இயங்கும் போது வேகம் குறைவதையும் நீங்கள் கவனிக்கலாம். வெப்பமான கோடையில் மின்விசிறி வேகமாகத் சுழலவில்லை என்றால் அது பெரிய பிரச்சனை. இப்பிரச்னையால் கோடை காலத்தில் மின்விசிறியில் இருந்து போதிய காற்று வருவதில்லை. வேகத்தை 5இல் வைத்தாலும், அது 1-க்கு சமம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். விசிறி கத்திகள் தூசியால் அழுக்காக இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

Advertisement

ஃபேன் விசிறிகளை சுத்தம் செய்வதற்கு முன் மின்விசிறியை ஆஃப் செய்ய மறக்காதீர்கள். பின்னர் ஃபேன் பிளேடுகளை முதலில் உலர்ந்த துணியால் சுத்தம் செய்யவும், பின்னர் ஈரமான துணியால் சுத்தம் செய்ய வேண்டும். முதலில் ஈரத் துணியைப் பயன்படுத்தினால், அனைத்து தூசித் துகள்களும் மின்விசிறி பிளேடுகளில் ஒட்டிக் கொண்டு, மின்விசிறி சரியாகச் சுத்தம் செய்யாது. துடைத்த பிறகு, அது மீண்டும் அழுக்கு போல் தெரியும். அதனால்தான் முதலில் உலர்ந்த துணியைப் பயன்படுத்த வேண்டும்.

இந்த முறை வேலை செய்யவில்லை என்றால், கண்டென்ஸர் (Condenser) மூலம் வேகத்தை அதிகரிக்கலாம். பொதுவாக கண்டென்ஸர் 70-80 ரூபாய்க்குள் வரும். ஆன்லைன் இ-காமர்ஸ் தளங்களில் வாங்கலாம் அல்லது எலக்ட்ரிக்கல் பொருட்களை விற்கும் கடைகளிலும் கிடைக்கும். கண்டென்ஸர் மாற்றுவது அவ்வளவு கடினம் அல்ல. அதை நீங்களே மாற்றிக் கொள்ளலாம். இது ஃபேனின் மோட்டருக்கு மேலே இருக்கும். பழைய கண்டென்ஸரை அகற்றும் போது அதன் ஒயர் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள். சரியாக அதே வழியில் புதிய கண்டென்சரை மாற்றுங்கள். அதன் பிறகு மின்விசிறியை ஆன் செய்தால் அது சூப்பர் ஸ்பீடில் சுழலும்.

Read More : பெண்களே செம குட் நியூஸ்..!! வரும் 15ஆம் தேதி உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.1,000 வந்துவிடும்..!!

Advertisement