For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

CBSE தேர்வு 2024: "தேர்வு தேதிகளில் மாற்றம் குறித்த போலியான நோட்டீஸ்". தேர்வு வாரியம் எச்சரிக்கை.!

08:13 PM Feb 16, 2024 IST | 1newsnationuser7
cbse தேர்வு 2024   தேர்வு தேதிகளில் மாற்றம் குறித்த போலியான நோட்டீஸ்   தேர்வு வாரியம் எச்சரிக்கை
Advertisement

சிபிஎஸ்இ பொது தேர்வுகள் தற்போது இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ போர்டு தேர்வுகள் குறித்து பல்வேறு சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான தகவல்களுக்கு எதிரான சுற்றறிக்கையை சிபிஎஸ்இ வெளியிட்டு இருக்கிறது.

Advertisement

விவசாயிகளின் போராட்டம் காரணமாக 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போலியான ஒரு நோட்டீஸ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு எதிராக சிபிஎஸ்சி தனது 'X' வலைதள பக்கத்தில் சுற்றறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளது. 'CBSE FACT CHECK' என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தனது சுற்றறிக்கையை பதிவு செய்திருக்கிறது சிபிஎஸ்இ. மேலும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நோட்டீஸ் போலியானது என்றும் அதுபோன்ற எந்த முடிவும் வாரியத்தால் எடுக்கப்படவில்லை என்றும் தனது சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தி இருக்கிறது.

விவசாயிகளின் போராட்டம் தொடர்பான பிரச்சனையால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு போலியான ஒரு நோட்டீஸ் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் அந்த அறிக்கையில் மாணவர்கள் தேர்வுக்கு வருவதில் சிரமங்களை சந்தித்தால் தங்கள் தேர்வு மையங்கள் அல்லது தேதியை மாற்றுவதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த அறிக்கையை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிராகரிக்குமாறு சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ இதுபோன்ற எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறது.

சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்த தகவல்களை அறிவதற்கு அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்களை பின்பற்றுமாறு மாணவர்களையும் பெற்றோரையும் சிபிஎஸ்இ அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாக போராட்டங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து குறைவாக தேர்வுக்கு புறப்படுமாறு அறிவுறுத்தி இருந்தது. மேலும் டெல்லியில் உள்ள மாணவர்கள் மெட்ரோவை பயன்படுத்துமாறு சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement