பரபரப்பு..! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய CBI விசாரணை வழக்கு... உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை...!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 70 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயத்தை குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது வரை 20-க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை, பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு, பாஜக சார்பில் வழக்கறிஞர் ஏ.மோகன் தாஸ் ஆகியோர் சிபிஐ விசாரணை கோரி ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கில் சமீபத்தில் சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 70 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ததற்கு பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.