பரபரப்பு..! விசா ஊழல் வழக்கில் எம்.பி கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை...!
விசா ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டில் சீன நாட்டினருக்கு விசாக்களை வழங்குவதற்காக ப.சிதம்பரமும், அவரது உதவியாளரும் 'டிஎஸ்பிஎல்' என்ற நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. பஞ்சாபில் டிஎஸ்பிஎல் நிறுவனத்தை அமைக்கும் பணிகளை சீன நிறுவனம் மேற்கொண்டு வந்தது. அந்த நிறுவனத்துக்காக 263 சீனத் தொழிலாளர்களுக்கு விசா பெற்றுத்தர கார்த்தி சிதம்பரத்துக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக சிபிஐ கடந்த 2022 மே மாதம் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
வேதாந்தா குழுமம் சார்பில் பஞ்சாபில், அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பாக, 2011-ம் ஆண்டு 263 சீனர்களுக்கு விசா பெற்றுத்தர கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், இதற்காக அவர் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2022 மே மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கில் அவரது நெருங்கிய கூட்டாளியான பாஸ்கரராமன் என்பவரையும் சிபிஐ கைது செய்தது.
இந்த வழக்கில், இரண்டு ஆண்டு விசாரணையை முடித்துள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி, அவரது உதவியாளர் பாஸ்கரராமன், டி.எஸ்.பி.எல்., மற்றும் மும்பையை சேர்ந்த பெல் டூல்ஸ் நிறுவனம் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான சீன பணியாளர்களை அழைத்து வர அந்நிறுவனம் திட்டமிட்டது. இதற்காக அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான விசாக்களை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியுடன் அந்நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கு, தன் தந்தை சிதம்பரத்தின் உதவியை கார்த்தி பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என குற்ற பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.