முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Cauvery: நாங்கள் என்ன முட்டாள்களா?… தமிழகத்துக்கு தண்ணீர் கிடையாது!… கர்நாடகா பிடிவாதம்!

07:13 AM Mar 12, 2024 IST | 1newsnationuser3
Advertisement

Cauvery: பெங்களூருவில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதால் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தற்போது தண்ணீர் திறப்பதாக இல்லை என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் புதுச்சேரியில் மார்ச் 21-ம் தேதி நடைபெறுகிறது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. வழக்கமாக காணொளி காட்சி மூலம் நடைபெறும் நிலையில் இம்முறை புதுச்சேரியில் கூட்டம் நடைபெறுகிறது. மார்ச் மாதம் காவிரியில் கர்நாடகா திறந்துவிட வேண்டிய நீரின் அளவு குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும், இவ்வாறான சூழலில் தான் தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதாக இல்லை என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே சிவகுமார் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடுவதாக வந்த தகவலில் உண்மையில்லை, பெங்களூருவுக்குத் தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டதே தவிர அண்டை மாநிலத்துக்கு அல்ல. காவிரி நதி நீரை இப்போது தமிழ்நாட்டுக்கு திறந்து விடுவதா என்ற கேள்விக்கே இடமில்லை.

தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் செல்கிறது என்பது குறித்து கணக்கு இருக்கிறது. இன்று தண்ணீர் திறக்கப்பட்டாலும், அங்கு வருவதற்கு நான்கு நாட்கள் ஆகும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட இந்த அரசில் நாங்கள் முட்டாள்களாக உட்கார்ந்திருக்க வில்லை” என அவர் கூறியுள்ளார்.

Readmore: 2024 நாடாளுமன்ற தேர்தல்.. மொத்தம் 2100 பார்வையாளர்கள் நியமனம்…! உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்…!

Tags :
Cauvery waterகர்நாடகா பிடிவாதம்தமிழகத்துக்கு தண்ணீர் கிடையாதுநாங்கள் என்ன முட்டாள்களா?
Advertisement
Next Article