முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நெருக்கடியை ஏற்படுத்துகிறதா?… ஒரே நாடு ஒரே தேர்தல்!… ஜன.15க்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

06:42 AM Jan 06, 2024 IST | 1newsnationuser3
Advertisement

நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் (ஒரே நாடு ஒரே தேர்தல்) நடத்துவது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. இதில் முக்கியமாக, தேர்தல் நடைமுறையில் இந்த மாற்றத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்படும் என்பது ‘ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு' ஆதரவளிக்கும் தரப்பினரின் கருத்தாக உள்ளது. ஏனெனில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் புதிய திட்டங்கள், வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட எதையும் தேர்தல் முடியும் வரை அரசால் அறிவிக்க முடியாது.

Advertisement

தற்போதைய நடைமுறையின்படி, ஆண்டுதோறும் ஏதேனும் சில மாநிலங்களின் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. அதன் காரணமாக நாட்டின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகின்றன என்பது அதை ஆதரிப்போரின் வாதமாக உள்ளது. அத்துடன், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால், தேர்தல் செலவுகள் வெகுவாகக் குறையும், அரசுப் பணியாளர்களை அவ்வப்போது தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்தநிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஜனவரி 15ம் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த சட்டங்களில் திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனை அனுப்பலாம். இந்த பரிந்துரைகளை onoe.gov.in அல்லது sc-hic@gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் என ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற தேர்தல் இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. நாடாளுமன்றம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாகவும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயவும், முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு, உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்தது குறிப்பிடத்தக்கது.

மக்களவை முதல் பஞ்சாயத்து தேர்தல் வரை, நாட்டின் மூன்று அடுக்குகளிலும் தேர்தல் நடத்த, மொத்தம், 10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் அல்லது ஒரு வாரத்திற்குள் நடத்தப்பட்டால், அதன் செலவு ரூ.3 முதல் 5 லட்சம் கோடி வரை குறையும் என்றும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு இன்று வெளியான நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை இந்தியாவில் கொண்டு வரப்பட்டால் பல மாநிலங்களின் ஆட்சிகள் கலைக்கப்படும் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இருப்பினும் கூட தற்போது வரை எதிர்க்கட்சிகள் தரப்பில் எந்தவித எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படாமல் உள்ளது.

Tags :
One country one electionஒரே நாடு ஒரே தேர்தல்நெருக்கடிபொதுமக்கள்ஜன.15க்குள் கருத்து தெரிவிக்கலாம்
Advertisement
Next Article