காங்கோவில் பரவும் மர்ம காய்ச்சல்.. இதுவரை 79 பேர் பலி..!! அறிகுறிகள் என்னென்ன?
காங்கோவில் பெயர் அறியப்படாத மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 79 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஆப்பிரிக்காவில் இரண்டாவது மிகப்பெரிய நாடு காங்கோ ஜனநாயக குடியரசு. இங்கு மர்ம காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது. குறிப்பாக வாங்கோ மாகாணத்திற்கு உட்பட்ட பான்ஸி சுகாதார மண்டலத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையொட்டி சிறப்பு மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 79 பேர் பலியாகியுள்ளனர்.
இவர்களில் பலர் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அதாவது டீன் ஏஜ் பருவனத்தினர் அதிகம் உயிரிழப்பது தெரிகிறது. இந்த காய்ச்சல் கிட்டதட்ட ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பை போன்றே இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, சளி, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக காங்கோவில் உள்ள குவாங்கோ மாகாணத்தின் துணை ஆளுநரான ரெமி சாகி மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் அப்பல்லினேர் யூம்பா ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
200க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவர்களின் எச்சில் மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து நோயை அடையாளம் காண பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக கிளைமேட் மாறுவதால் சீசன் காய்ச்சல் ஏற்படும். அது போல இந்த நோய் ஏற்பட்டு வருகிறது. இது காய்ச்சல் போல இருந்தாலும் காய்ச்சல் இல்லை என்று கூறப்படுகிறது. சிலருக்கு மருந்து எடுத்தாலும் குணமாகவில்லை என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.
வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு : காங்கோ நாட்டில் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். கூட்டம் நிறைந்த இடங்களை தவிர்க்க வேண்டும். ஒருவரை ஒருவர் தொட்டு பேசக் கூடாது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். அமைதி காக்க வேண்டும். நிலைமையை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். அரசின் அறிவுறுத்தலுக்கு செவிசாய்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Read more : சிறு வணிகர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன்..!! அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு..!!