சிறுநீரக கற்களை சுக்குநூறாக உடைக்கும் அற்புத இலை.!அழகிற்கு வளர்க்கும் இந்தச் செடியில் இத்தனை நன்மைகளா.?
அலங்கார தாவரமாக பல வீடுகளிலும் வளர்க்கப்படும் ரணகள்ளி இலை பல்வேறு மருத்துவ பண்புகளை கொண்டிருக்கிறது. இவை பெரும்பாலும் அழகிற்காக வளர்க்கப்பட்டாலும் இவற்றில் இருக்கக்கூடிய சத்துக்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிக்கின்றன. ஆயுர்வேத மருத்துவம் இந்த இலைகளின் மகத்துவத்தை பற்றி விரிவாக கூறுகிறது. இந்த ரணகள்ளி இலைகளில் பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற மினரல்கள் நிறைந்து இருக்கிறது.
பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு கொண்ட இந்த ரணகள்ளி இலைகள் புண்கள், மஞ்சள் காமாலை மற்றும் கண் வலி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக கருதப்பட்டாலும் சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை அகற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த இலைகள் சிறுநீரகத்தில் இருக்கும் எவ்வளவு பெரிய கற்களையும் வழியின்றி கரைத்து வெளியேற்றி விடும். தினமும் இந்தச் செடியின் இலைகளை அரைத்து ஒரு வாரம் சாப்பிட்டு வர சிறுநீரகத்தில் இருந்து கற்கள் முற்றிலுமாக வெளியேறும். இந்த ரணகள்ளி இலைகளை சாப்பிடும் போது இறைச்சி மீன் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இவை சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாது சர்க்கரை நோயை குணப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் இந்த இலைகளின் சாறு எடுத்து கண்களை சுற்றி தடவி வர கண் வலி குணமாகும். இவற்றின் சாறு சிறந்த ஆன்டிபயாட்டிக். இதனை அரைத்து புண்களில் தடவி வர விரைவில் குணம் கிடைக்கும். இந்த இலைகளை வெற்றிலையுடன் சேர்த்து அரைத்து புண்களில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இந்த இலைகளின் சாறு எடுத்து காதுகளில் ஊற்றி வந்தால் காது வலி நீங்கும்.