For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது"..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!

A Madras High Court judge has opined that caste names should not be used in government schools in Tamil Nadu.
12:36 PM Jul 26, 2024 IST | Chella
 அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது      சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
Advertisement

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை மேம்பாட்டுத் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். தாமாக முன்வந்து எடுத்த இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கல்வராயன் மலையில் 150 பள்ளிகள் இருப்பதாக தமிழக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கல்வராயன் மலைப்பகுதியில் அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கியதைப் போல அரசுப் பள்ளிகளிலும் நீக்கிவிடுங்கள். மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயர்கள் இருக்கலாமா? எஎன்று கேள்வி எழுப்பினார். பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் தலைமையில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அரசுக் குழுவுடன் மூத்த வழக்கறிஞர் தமிழ் மணியும் கல்வராயன் மலைக்கு உடன் செல்ல வேண்டும் என்று நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Read More : டியூசனுக்கு வந்த மாணவனை மயக்கி உல்லாசம்..!! 15 வயது சிறுவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை..!! விருதுநகரில் அதிர்ச்சி..!!

Tags :
Advertisement