முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சீமானுக்கு எதிரான வழக்கு.. விசாரணையை விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு..!!

Case against Seaman.. Court order to complete investigation quickly..
04:59 PM Nov 28, 2024 IST | Mari Thangam
Advertisement

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போரட்டம் ஒன்றை நடத்தி இருந்தார். அப்பொழுது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையிலும் இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் வெளியே வந்த சீமான் மீது 2018 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கலானது.

Advertisement

தற்போது வரை இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சீமான் மீதான இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்குமார், இந்த வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கி 13 சாட்சிகள் விசாரணை முடிந்துள்ளதாகவும் ,எனவே வழக்கை ரத்து செய்யக் கூடாது என வாதிட்டார்.

அப்போது நாம் தமிழர் கட்சி சீமான் தமிழ் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சங்கர் சாட்சிகள் விசாரணை தொடங்கி விட்டதால் வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை திரும்ப பெற அனுமதித்தனர். அதே வேளையில் வழக்கு எவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Read more ; தொடர்ந்து கண்ணாடி அணிவதால் தழும்புகள் ஏற்படுகிறதா..? அதை எளிமையாக நீக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

Tags :
Case against Seamanchennai high courtinvestigation quickl
Advertisement
Next Article