பரபரப்பு...! அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு... உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்குகளை விசாரிப்பதில் வேண்டுமென்றே தமிழ்நாடு அரசு தாமதம் செய்வதாக கூறிய வழக்கை உச்ச நீதிமன்றம் டிசம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் 471 நாட்களுக்குப் பின், அமர்வு நீதிமன்றம் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த தடையும் இல்லை, விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்குகளை விசாரிப்பதில் வேண்டுமென்றே தமிழ்நாடு அரசு தாமதப்படுத்துவதாகக் கூறி ஒய்.பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விரைந்து வழக்கை பட்டியலிட்டு விசாரித்து முடிக்க வேண்டும் என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என்று மனுதாரரிடமும், அதேபோன்று வழக்கு குறித்த அறிக்கையை உயர்நீதிமன்ற பதிவாளர், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் முன்னதாக உத்தரவிட்டுருந்தது.
தமிழக அரசு விசாரணை நீதிமன்றத்தை நாடி அனைத்து வழக்குகளையும் ஒன்றாகவே நடத்தும் உத்தரவை கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பெற்றுள்ளது. அந்த உத்தரவை எதிர்த்தும் மனு தாக்கல் செய்ய உள்ளோம். அதனால், அதற்கான உத்தரவு நகலை எங்களுக்கு வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், முன்னதாக நாங்கள் அதுகுறித்து விண்ணப்பித்தும் எங்களுக்கு உத்தரவு நகல் வழங்கப்படவில்லை' என்றார். இதையடுத்து, வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.