For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விம்பிள்டன் டென்னிஸ் : ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் அல்காரஸ்..!!

Carlos Algarz defeated Djokovic 3-0 in straight sets to win the Wimbledon tennis final.
08:20 AM Jul 15, 2024 IST | Mari Thangam
விம்பிள்டன் டென்னிஸ்   ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார் அல்காரஸ்
Advertisement

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் 3-0 என்கிற நேர் செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Advertisement

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் மற்றும் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் நேற்று (ஜூலை 14) பலப்பரீட்சை நடத்தினர். விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல இருவரும் கடுமையாக போராடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 6க்கு 2, 6க்கு 2, 7க்கு 6 என்ற நேர் செட் கணக்கில் ஜோக்கோவிச்சை அல்காரஸ் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் அல்காரஸ் வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  இதன் மூலம் 21 வயதில் 2 முறை அடுத்தடுத்து விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற 3 வது வீரர் என்ற பெருமையை அல்காரஸ் பெற்றுள்ளார்.

இளம் வீரரான கார்லஸ் அல்காரஸ் வெல்லும் 4ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது. இதன் பரிசுத்தொகை, இந்திய மதிப்பில் சுமார் 28.5 கோடி ரூபாய். 24முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனையை தன்வசம் வைத்துள்ள ஜோக்கோவிச் இரண்டாவது முறையாக அல்காரஸிடம் சாம்பியன் பட்டத்தை இழந்துள்ளார்.

Read more | விம்பிள்டன் 2024 | ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரிட்டனின் பேட்டன் மற்றும் ஹெலியோவாரா பட்டம் வென்றனர்..!!

Tags :
Advertisement