பெட்ரோல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில்!. தடம் புரண்டு விபத்து!. ம.பி.-யில் பரபரப்பு!
Madhya Pradesh: மத்தியப் பிரதேசத்தில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.
நாடுமுழுவதும் ஆங்காங்கே ரயில்கள் தடம்புரண்டு விபத்துகள் ஏற்படுவது அதிகமாகி வருகின்றன. இந்தநிலையில், மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் அருகே நேற்று இரவு சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. ராஜ்கோட்டில் இருந்து போபால் அருகே பகானியா-பூரிக்கு சரக்கு ரயிலில் பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. அப்போது ரயில், டெல்லி-மும்பை வழித்தடத்தில் உள்ள ரயில்வே யார்டு அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விபத்தில் தடம்புரண்ட ரயில் பெட்டி ஒன்றியில் இருந்து பெட்ரோல் கசிந்ததாகவும், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்று ரத்லமின் கோட்ட ரயில்வே மேலாளர் (டிஆர்எம்) ரஜ்னிஷ் குமார் கூறினார்.
Readmore: தாக்கினால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்!. வடகொரிய அதிபர் பகிரங்க எச்சரிக்கை!