அமெரிக்கா: விண்ணை முட்டும் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோசம்.! கார்கள் அணிவகுப்பு.! டெக்சாஸ் வீதிகளில் களை கட்டிய ராமர் கோவில் கும்பாபிஷேகம்.!
ராமர் கோவில் திறப்பு விழா வருகின்ற 22-ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலம் அயோத்தி நகரில் வைத்து நடைபெற இருக்கிறது. இதற்காக அயோத்தி மட்டுமல்லாது இந்திய தேசமே கோலாகலமாக தயாராகி வருகிறது . 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியது. மூன்று அடுக்குகளைக் கொண்டு பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவிலின் திறப்பு விழா இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற இருக்கிறது.
இந்த கோவிலின் திறப்பு விழா 22 ஆம் தேதி 12:20 மணியளவில் நடைபெற இருக்கிறது. கோவில் திறப்பு விழாவை பிரதமர் மோடி தலைமை தாங்கி நடத்தி வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீராமரின் குழந்தை வடிவு சிலையும் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. இந்த நிகழ்விற்காக விழா ஏற்பாடுகள் முழு வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதிலும் இருந்து 8000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவின் கொண்டாட்டங்கள் அமெரிக்காவிலும் கலைக்கட்ட தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஹவுஸ்டன் நகரில் வாழும் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ராமர் கோவில் திறப்பு விழாவை சிறப்பிக்கும் வகையில் 200க்கும் அதிகமான கார்களில் ஜெய் ஸ்ரீ ராம் கோசத்துடன் ஊர்வலமாக சென்றனர். அந்த நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி கோயிலில் தொடங்கிய பேரணி 100 கிலோமீட்டர் தூரம் பயணித்து சென்று ரிச் மவுண்ட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதாம்பா கோவிலில் நிறைவடைந்தது. கார்களில் ஊர்வலமாக சென்றவர்கள் இந்திய தேசிய கொடியுடன் அமெரிக்க தேசிய கொடி மற்றும் காவிக் கொடிகளையும் ஏந்தி சென்றனர்.