For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கேப்டன் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் பொருத்தம்..!! மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

10:22 AM Nov 20, 2023 IST | 1newsnationuser6
கேப்டன் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் பொருத்தம்     மருத்துவமனை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Advertisement

தமிழ் சினிமா வரலாற்றில் இருந்து அழிக்க முடியாத மாபெரும் நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடம் பிடித்துள்ளது. அரசியலில் களமிறங்கிய பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதற்கிடையே, உடல்நலம் சரியில்லாமல் போக தற்போது முழுமையாக மருத்துவ கவனத்தில் இருந்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில், 71 வயதாகும் நடிகர் விஜயகாந்த் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவருக்கு மார்பு சளி, இடைவிடாத இருமல் இருப்பதால் இடைக்கு இடையில் செயற்கை சுவாசம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3-வது நாளாக நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement