முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கேப்டன்!. தலைவன்!. லெஜண்ட்!. எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள்…!. மனைவியுடன் கேக் வெட்டிக் கொண்டாட்டம்!

Captain! Leader! Legend!. MS Dhoni's birthday...!. Cake cutting celebration with wife!
05:50 AM Jul 07, 2024 IST | Kokila
Advertisement

MS Dhoni Birthday: வாழ்வின் பல பால பாடங்களை பால்ய வயதிலேயே கற்றுக் கொண்டு இந்திய கிர்க்கெட்டில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தோனி. உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்தாலும், பக்குவப்பட்ட மனிதன் தோனி. வெற்றி தோல்வி என இரண்டையுமே சரியாக கையாளத் தெரிந்த தோனியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மகேந்திர சிங் தோனியின் 43 வது பிறந்தநாளை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் பெரிய பேனர்கள் வைத்து கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். இவருடைய கிரிக்கெட் வரலாற்றில் இவர் வென்ற கோப்பைகள் பற்றி பார்ப்போம்.

Advertisement

தல தோனி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 1981ம் ஆண்டு பிறந்தார். பள்ளி பருவத்தில் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்த தோனி சிறந்த கோல்கீப்பரா விளங்கி வந்துள்ளார். இந்நிலையில், அந்த பள்ளியின் கிரிக்கெட் அணிக்கு விக்கெட் கீப்பர் ஒருவர் தேவைப்பட்ட நிலையில், கோல்கீப்பரான தோனியை விக்கெட் கீப்பராக நியமித்துள்ளார் அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர். அப்போது தொடங்கியது தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை.

விக்கெட் கீப்பிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடிய தோனி, பள்ளி கிரிக்கெட்டில் இருந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட தொடங்கினார். பின்னர் மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடிய தோனி, ரெயில்வே அணிக்கு தேர்வானார். அதிலும் தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்திய தோனி இந்திய அணிக்கு தேர்வானார்.

2004ம் ஆண்டு முதல் முதலாக வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். பேட்டிங்கில் பந்துவீச்சாளர்களை திணறடித்த தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் இந்திய ரசிகர்களை அவர் வசப்படுத்தியது. இந்நிலையில், 2007ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார் தோனி. இவரது தலைமையில் தான் இந்திய அணி, அதே ஆண்டில் 20 ஓவர் உலககோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது.

23 வயதில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்துக்கொண்டதன் மூலம் எம்.எஸ்.தோனி தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். 2005ல் அவர் தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். 2007 ஆம் ஆண்டு ஐசிசி உலக T20யில் இந்தியாவிற்காக கோப்பையை வென்று தந்தார். 2008 ஆம் ஆண்டு இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரான பார்டர்-கவாஸ்கர் டிராபியை வென்றார். இதுவரை மூன்று பார்டர்-கவாஸ்கர் டிராபிகளை வென்றுள்ளார். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனாக 2010ல் முதல் 5 ஐபிஎல் வெற்றியை கைப்பற்றினார்.

2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியாவுக்காக வென்றார். இறுதி போட்டியில் 90 ரன்களுக்கு மேல் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன்மூலம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி மீண்டும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவிற்கு பட்டத்தை வென்றார்.

அப்போதைய நிலையில், அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற உலகின் ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார். பேட்டிங்கில் மட்டுமில்லாமல் கீப்பிங்கிலும் புகழ் பெற்றவர் தோனி. மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வது, பின்னால் இருக்கும் ஸ்டம்பயே பார்க்காமல் ரன் அவுட் செய்வது உள்ளிட்ட பல அசாத்திய திறமைகளால் சிறந்த விக்கெட் கீப்பராகவும் விளங்கினார் தோனி.

2016ஆம் ஆண்டு இந்தியாவிற்காக ஆசிய கோப்பை டி20யை வென்றார். இதுவரை இரண்டு ஆசிய கோப்பைகளை வென்றுள்ளார். இரண்டும் சிபி தொடர்களையும் வென்று தந்துள்ளார். கடைசியாக 2019ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இதனையடுத்து அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். சென்னை அணிக்காகவும் தோனி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மேட்சில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐந்தாவது இந்தியன் பிரீமியர் லீக் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. மகேந்திர சிங் தோனி, கிரிக்கெட் வரலாற்றில் மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் ஆவார். சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னையின் கேப்டனாக தோனி விளையாடியதன் மூலம், கேப்டனாக 200வது போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் பெற்றார்.

சென்னை அணிக்காக 14வது சீசனில் கேப்டனாக விளையாடிய தோனி, இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தையும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையையும் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் 11 முறை சென்னை அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் தோனி இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனந்த் அம்பானி - ராதிகா தம்பதி திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள எம்.எஸ்.தோனி, தனது 43வது பிறந்தநாளையொட்டி, மனைவி சாக்‌ஷியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Readmore: ”வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு”..!! ”இந்த வங்கிக்கு இனி போகாதீங்க”..!! உரிமத்தை அதிரடியாக ரத்து செய்தது ரிசர்வ் வங்கி..!!

Tags :
Captainhappy birthday thalaleaderLegendMS Dhoni's birthday
Advertisement
Next Article