தலைநகரம் திரைப்பட நடிகையா இது..? இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா..? ஆளே அடையாளம் தெரியல..!!
80ஸ் மற்றும் 90ஸ் நடிகைகளின் சமீபத்திய புகைப்படங்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள்? எங்கே இருக்கிறார்கள்? என்ற தகவல்களை தேடி பிடித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், தற்போது தலைநகரம் பட ஹீரோயினின் லேட்டஸ்ட் தகவல் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை ஜோதிர்மயி. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், தனது அசத்தலான நடிப்பினை வெளிக்காட்டியதன் மூலம் சிறந்த துணை நடிகை, சிறந்த நடிகை உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். தமிழ் மக்கள் பெரும்பாலானோருக்கு இவரை நினைவிருக்க வாய்ப்பில்லை. ஆனால், இவர் நடித்த படத்தை சொன்னால் உடனே நினைவுக்கு வந்துவிடும். அந்த படம் தான் இயக்குநர், நடிகர் சுந்தர் சி நடிப்பில் 2006ஆம் ஆண்டு வெளியான தலைநகரம் திரைப்படம்.
இப்படத்தில் சுந்தர் சி-க்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜோதிர்மயி. இப்படத்தில் வரும் வடிவேலுவின் காமெடி ஒவ்வொன்றும் இன்றும் அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறது. அதிலும் வடிவேலுவின் நாய் சேகர் கதாபத்திரத்தையும், பெயரையும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் மக்கள் மறக்கமாட்டார்கள். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஜோதிர்மயி-யையும் இளைஞர்கள் நோட் செய்ய ஆரம்பித்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
ஆனால், தற்போது மலையாள சினிமாவில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது 41 வயதாகும் ஜோதிர்மயி எப்படி இருக்கிறார் தெரியுமா? ஜோதிர்மயி அமல் நீரட் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் போஸ்டர் தான் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் அவரா இது என தமிழ் ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார் ஜோதிர்மயி.
Read More : ஆசிரியர்கள் கவனத்திற்கு..!! பொது மாறுதல் கலந்தாய்வு..!! தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை..!!