இந்த உணவை சாப்பிடுவதற்கு முன் கண்டிப்பா இந்த விஷயத்தை மறந்துறாதீங்க..!! விஷமா மாறிடும்..!!
பாகற்காய் என்றாலே எனக்கு பிடிக்காது என்று சொல்பவர்கள் தான் அதிகம். அந்த பெயரை சொன்னாலே எல்லோருக்கும் கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். பெரும்பாலானவர்கள் கட்டாயத்தின் பேரிலே இந்த காயை சாப்பிடுவார்கள். ஆனால், பாகற்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கியம் நிறைந்த நன்மைகளும் இருக்கின்றன. குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது இயற்கையால் படைக்கப்பட்ட அற்புத காய்கறி என்று கூட சொல்லலாம். ஆனால், இதை சில உணவுகளோடு சேர்த்து சாப்பிடக்கூடாது.
ஆம், முள்ளங்கி சாம்பாருக்கு பாகற்காய் வறுவல் சாப்பிட சுவையாக தான் இருக்கும். ஆனால், முள்ளங்கியை பாகற்காயுடனோ, பாகற்காய் சாப்பிட்ட பிறகோ அடுத்த வேளையோ எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. காமினேஷனும் கேட்க நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அப்படி சாப்பிடக் கூடாதாம். முள்ளங்கியை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடும் போது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். அதாவது, வாந்தி, தலைசுற்றல், மந்தம் மற்றும் குமட்டல் பிரச்சனைகள் ஏற்படும்.
அதேபோல், பாகற்காய் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரையிலும் பால் குடிக்கக்கூடாது. ஆம், பால் பொருட்களை பாகற்காயுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அதேபோல, பாகற்காய் சாப்பிட்டு ஒரு மணி நேரம் வரை பாலும் குடிக்கக்கூடாது. இந்த இரண்டு உணவுகளும் சேரும்போது அஜீரணக் கோளாறு உண்டாகும். ஏற்கனவே வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த காம்பினேஷனை கட்டாயம் தவிர்க்க வேண்டும். காரணம், அது வயிற்று வலி, வயிறு எரிச்சல் வயிறு உப்பசம் உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாக்க கூடும். மொத்தத்தில் உடலின் ஆரோக்கியம் கெட்டுவிடும்.
அதேபோல், பாகற்காயை மட்டன் போன்ற இறைச்சிகளுடன் சேர்த்து சமைக்கக் கூடாது. இந்த இரண்டு உணவுகளும் சேரும்போது உணவின் சுவை கெட்டுவிடும். மேலும் இந்த கலவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ், மிச்சர், சர்க்கரை போன்றவை பாகற்காயில் உள்ள இயற்கையான கசப்புடன் உடனே ரியாக்ட் செய்கிறது. எனவே இந்த கலவை மிகவும் மோசமானது. ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. அதனால் பாதக்காய் சாப்பிடும் போதெல்லாம் சற்று கவனமாக இருப்பதே நல்லது.
Read More : IPL தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறார் தோனி..!! சிஎஸ்கே நிர்வாகம் போட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!!