For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கைகளில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க முடியாதா..? தீயாய் பரவும் தகவல் உண்மையா..?

10:11 AM Apr 18, 2024 IST | Chella
கைகளில் மருதாணி  மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க முடியாதா    தீயாய் பரவும் தகவல் உண்மையா
Advertisement

கைகளில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படாது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

Advertisement

பண்டிகை காலங்களில் பெண்கள் கைகளில் மெகந்தி அல்லது மருதாணியை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில சமயங்களில் ஆண்களும் கைகளில் மருதாணி வைக்கின்றனர். ஆனால், சில நாட்களாக கையில் மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படாது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த தகவல் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பரவியதால் அப்பகுதியில் உள்ள மக்கள் கையில் போடப்பட்ட மருதாணியை ரசாயனம் கொண்டு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், மருதாணி விவகாரம் குறித்து தேர்தல் அலுவலரிடம் கேட்கப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”இது ஒரு அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. சில சமூகத்தினர் கொண்டாட்டங்களின் போது மருதாணி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். வாக்குச்சாவடியில் பெயர் இருந்தால் யார் வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்" என்று விளக்கம் அளித்தார்.

Read More : WhatsApp நிறுவனத்தின் மாஸ் அப்டேட்..!! Chat Filters பற்றி தெரியுமா..? பயனர்கள் குஷி..!!

Advertisement