இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்..!! - மத்திய அரசை வலியுறுத்திய சத்குரு ஜக்கி வாசுதேவ்!!
வங்கதேசத்தில் அமைதியின்மை அதிகரித்து வருவதால், மெஹர்பூரில் உள்ள இஸ்கான் கோயிலில் ஜகன்னாதர், பலதேவ் மற்றும் சுபத்ரா தேவி உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் எரிக்கப்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் ராஜினா செய்ததை தொடர்ந்து, நாடு முழுவதும் வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஒரு பகுதியாக இந்துக்கள் மீதும், இந்து கோயில்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.
பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகு, நாடு முழுவதும் இந்து கோவில்கள் மீது பல தாக்குதல்களை அடுத்து சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பில் இந்தியா கவனம் செலுத்துகிறது. இந்திய அரசாங்கம் பங்களாதேஷுடனான அதன் எல்லையில் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது,
இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த செய்திகளுக்கு பதிலளித்து, ஆன்மிக குருவும் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் புதன்கிழமை, வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக எழுந்து நின்று விரைவில் செயல்பட வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தினார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்துக்களுக்கு இழைக்கப்படும் அட்டூழியங்கள், வங்காளதேசத்தின் உள்விவகாரம் மட்டுமல்ல. பாதுகாப்பை உறுதி செய்ய நாம் எழுந்து நின்று செயல்படாவிட்டால் பாரதம் மகாபாரதமாக முடியாது. இந்த நாகரிகத்தைச் சேர்ந்த மக்களை இந்த அதிர்ச்சியூட்டும் அட்டூழியங்களிலிருந்து பாதுகாப்பது எங்கள் பொறுப்பு என பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, யோகா குரு ராம்தேவ் வங்காளதேசத்தில் இந்துக்களின் வீடுகள், கோயில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். அண்டை நாட்டில் உள்ள இந்து சிறுபான்மையினரைப் பாதுகாக்க இராஜதந்திர ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முடிந்த அனைத்தையும் செய்ய மத்திய அரசை வலியுறுத்தினார்.
Read more ; Paris Olympics 2024 | மல்யுத்த இறுதிப் போட்டிக்கும் முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம்..!!