முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.20,000க்கு மேல் கடனை ரொக்கமாக பெற முடியாது!! ஆர்பிஐ அறிவிப்பு மக்களுக்கு பாதிப்பா?

06:10 AM May 23, 2024 IST | Baskar
Advertisement

அண்மையில் ரிசர்வ் வங்கி 20,000 ரூபாய்க்கு மேல் கடனை ரொக்கமாக பெற முடியாது என்று அறிவித்தது.

Advertisement

ரிசர்வ் வங்கி பல மாற்றங்களைக் கொண்டு வருகிறது. அதில் சில முக்கிய கட்டுப்பாடுகளும் அடங்கும்.அந்த வகையில் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு (NBFC), கடந்த மே 8ஆம் தேதி ஒரு அறிக்கையை அனுப்பி இருந்தது. அதன்படி ஒரு நபர் ரூ. 20,000 ரூபாய்க்கு மேல் கடனை ரொக்கமாக பெற முடியாது என்று அறிவித்தது. அதேபோல இந்த நடைமுறையை கண்டிப்பாக NBFC நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.

வருமான வரிச் சட்டம் 1961 கீழ், பிரிவு 269 எஸ்எஸ் விதியின்படி கடன் பெறும் ஒரு நபர் ரூ. 20,000 மேல் கடனை ரொக்கப் பணமாக பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல ரொக்க பரிமாற்றத்தின் போது வருமானவரித்துறை வழங்கும் உத்தரவுகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் NBFC நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.இது பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் பண அடிப்படையிலான நடைமுறைகள் தொடர்புடைய அபாயங்களை குறைப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது. இதனால் பயன்பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து பார்ப்போம். தங்க கடன்களை பெரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.20,000 ரொக்கமாக கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகையை வங்கி கணக்கில் செலுத்துகின்றனர். அவ்வாறு செலுத்தும் போது ,ஆரம்பத்தில் சில சவால்களை ஏற்படுத்தலாம்.

பாரம்பரியமாக பல கடன் வழங்குபவர்களும் அவர்களின் வசதி மற்றும் உடனடித் தன்மை காரணமாக ரொக்கப் பட்டுவாடாக்கள் செய்தனர். இருப்பினும் ரிசர்வ் வங்கி உத்தரவின்படி வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகள் மற்றும் மின்னணு பரிமாற்றங்களை பெறுவதற்கு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.ரொக்க பணமாக செலுத்துவதால், வாடிக்கையாளர்கள் வெளியில் பணத்தை எடுத்துச் செல்லும்போது திருட்டு, மோசடி போன்ற சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதுவே வங்கி கணக்கில் செலுத்தும் போது, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது சற்று குறைய தான் செய்கிறது. இன்னும் சொல்லப் போனால் ரொக்கப் பணப் பரிவர்த்தனை செய்வதை விட வங்கி கணக்கில் செலுத்துவது, இன்னும் பாதுகாப்பானது.நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் இந்த செயல் முறையை நடைமுறைப்படுத்த தகுந்த தொழில்நுட்பத்தோடு உள்ளனர். இதனால் வங்கி கணக்கில் வாடிக்கையாளர்களின் பணத்தை செலுத்துவது அவ்வளவு பெரிய வேலையாக நிதி நிறுவனங்களுக்கு இருக்காது. இருப்பினும் வயதானவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் போன்றவர்களுக்கு ஆரம்பத்தில் இது சிக்கலாக இருக்கலாம். ஆனால் மிகவும் பாதுகாப்பான முறையாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது இருக்கிறது முதலில் இந்த நடைமுறை கஷ்டத்தை ஏற்படுத்தினாலும் உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.

Read More: ‘அதிகார வர்க்கத்துக்கு அறைகூவல் நீயே…’ அனிருத்தின் தரமான சம்பவம்.. வெளியானது இந்தியன் 2 படத்தின் பாடல்!

Advertisement
Next Article