"ஆட்சிக்காக ஸ்ரீராமரை விட்டுக் கொடுக்க முடியாது" - கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் தலைவர் பரபரப்பு பேட்டி.!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆறு வருடங்கள் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது..
காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுனா கார்கே நேற்று ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணமை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். கட்சியின் வரம்புகளை மீறி ஒழுங்கின நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் 6 வருடங்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் " காங்கிரஸ் தன்னை கட்சியிலிருந்து விடுவித்தது குறித்து அவர்களுக்கு நன்றி சொல்வதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் 6 வருடங்களுக்குப் பிறகு 14 வருடங்கள் தன்னை நீக்கி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஸ்ரீராமர் 14 வருடங்கள் வனவாசம் சென்றதைப் போல் எனக்கும் கிடைத்திருக்கும் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ராஜ்யத்திற்காக ஸ்ரீராமரை விட்டுக் கொடுக்க முடியாது எனக் கூறினார். ஸ்ரீராமரின் விஷயத்தில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள முடியாது எனவும் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். கட்சிக்கு எதிராக நான் எந்த நடவடிக்கையில் ஈடுபட்டேன் என தெரியவில்லை. ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை ஏற்றுக் கொண்டதை கட்சிக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறுகிறார்களா.? அல்லது ராமர் கோவிலுக்கு சென்று வந்ததை கட்சிக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறுகிறார்களா என்று கேள்வி எழுப்பினார் .
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு கொடுத்த வாக்கின் அடிப்படையில் இன்று வரை அந்த கட்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். "என் உயிர் போகும் வரை காங்கிரஸ் கட்சியை விட்டு போக மாட்டேன் என ராஜீவ் காந்திக்கு வாக்கு கொடுத்து இருக்கிறேன். அதைக் காப்பாற்றுவதற்காக தான் அந்த கட்சியில் இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி பல தவறான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் ராகுல் காந்தியையும் மறைமுகமாக குற்றம் சாட்டிய அவர் ராகுல் காந்தி வெறுப்பை விதைத்து வருவதாக தெரிவித்தார். நாட்டின் பிரதமரை எதிர்க்கிறேன் என முடிவு செய்த அவர் தற்போது நாட்டையே எதிர்ப்பது சரியான அணுகுமுறை இல்லை என்றும் கூறினார்.